ஆழ்கடல் மீன்பிடி வள்ளத்தில் இருந்து திடீரென கடலில் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் நேற்றிரவு தங்காலை மீனவ துறைமுகத்திற்கு எடுத்துவரப்பட்டது.
குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற ஆழ்கடல் மீன்பிடி வள்ளத்தில் இருந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் திக்வெல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்டவர். அத்துடன் திக்வெல்ல நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளராகவும் இவர் காணப்படுகின்றார். உயிரிழந்த இளைஞர் கடந்த ஏழாம் திகதி ஆழ்கடல் மீன்பிடி வள்ளம் ஒன்றில் 7 மீனவர்களுடன் சென்றுள்ளார். 17ம் திகதி அதிகாலை வலை வீசும் போது அதில் சிக்குண்டு இவ்விளைஞர் கடலில் வீழ்ந்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த இளைஞரின் சடலம் நான்கு நாட்களாக ஆழ்கடல் மீன்பிடி வள்ளத்தில் வைத்து எடுத்துவரப்பட்டது.
தனது புதல்வன் மீன்பிடி வள்ளம் ஒன்றில் சென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவெனவும் மீன்பிடி துறையில் எவ்வித அனுபவமும் இவருக்கு இல்லையெனவும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்த விசாரணைகள் தங்கல்லை மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்றது.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/_HwoUdG-lEw”]