fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வெண்ணப்புவ மீனவ துறைமுகத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2020 12:33

2 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வெண்ணப்புவ மீனவ துறைமுகத்தின் நிர்மாணப்பணிகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 25 ஏக்கர் விஸ்தீரனமுள்ள நிலப்பரப்பில் இம்மீனவ துறைமுகமானது கடற்பரப்பில் இருந்து 25 மீட்டர் தூரம் வரை விஸ்தரிக்கப்படுகின்றது. கடற்றொழில் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இரண்டு பில்லியன் ரூபா நிதி இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

நிர்வாக கட்டடம், மீன் வர்த்தக நிலையம், சிறிய அளவிலான வள்ள தரப்பிடம், 500 ஆழ்கடல் வள்ளங்களை நிறுத்தி வைப்பதற்குரிய வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படவுள்ளன. அத்துடன் மீன் ஏற்றுமதி பிரிவொன்றையும் இங்கு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடி வள்ள உரிமையாளர்களுக்கு இதன்மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆழ்கடல் மீன்பிடி வள்ள உரிமையாளர்களுக்கு கடற்றொழில் நடவடிக்கையின் போது முகங்கொடுக்க வேண்டியுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் இம்மீன்பிடி துறைமுகம் நிர்மாணிக்கப்படுவதன் மூலம் தீர்வுகள் கிடைக்கும் என ஆழ்கடல் வள்ள உரிமையாளர்களின் சங்க தலைவர் சுஜீத் சமந்த தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 20, 2020 12:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க