பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக செயலாளராக பிரபல ஊடகவியலாளர் ரொஹான் வெலிவிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
ரொஹான் வெலிட்ட பிரதமரின் செயலாளர் காமினி செனரத்திடம், பிரதமர் அலுவலகத்தில் வைத்து நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார். ரொஹான் வெலிவிட்ட சுயாதீன தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சி முகாமையாளராகவும் செய்திப் பணிப்பாளராகவும் செயற்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளராவர் 2000 ம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஊடக ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மஹிந்த ராஜபக்ஸ 2000 ம் ஆண்டு கடற்றொழில் அமைச்சராக இருந்தபோது அவரது ஊடக ஆலோசகராக செயற்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ஊடக ஆலோசகராக செயற்பட்டுள்ளார். 2005 ம் ஆண்டு முதல் 2015 ம் ஆண்டு வரை ஜனாதிபதியின் இணைப்பு செயலாளாரக செயற்பட்ட அவர் 2018 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட 52 நாள் அரசாங்கத்தில் பிரதமரின் ஊடக செயலாளராக செயற்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு தெரிவான புதிய அரசாங்கத்தின் பிரதமரின் ஊழியர் பிரிவு தலைவரின் ஊடக செயலாளராக ரொஹான் வெலிட்ட செயற்பட்டார். அவர் பிரதமரின் ஊடக செயலாளராக நேற்று தனது கடமைகளை ஆரம்பித்தார். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக இயக்குனரும், நூலாசிரியருமான ரொஹான் வெலிவிட்ட பன்னிப்பிட்டி தர்மபால கல்லூரியின் புகழ் மிகு பழைய மாணவருமாவார்.