பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த உபபொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை போதைப்பொருள் வர்த்தகத்துடன் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் தொடர்பில், விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்திணைக்களத்தின் ஆய்வக ஊழியர்கள் இருவர், ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டனர். எவ்வாறெனினும் குறித்த ஊழியர்கள் இத்திணைக்களத்தின் நிரந்தர ஊழியர்கள் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள ஊழியர்கள் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை முழுமையாக நிராகரிப்பதாகவும் அத்திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.