fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நீதிமன்றில் ஆஜராகுமாறு பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2020 12:37

நீதிமன்றில் ஆஜராகுமாறு பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. கவனயீமாக வாகனம் செலுத்தி பாரிய விபத்தொன்றை ஏற்படுத்தியதாக அவருக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 3 பேருக்கெதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி நாளைய தினம் அவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். எனினும் இடையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்து, பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

நாளை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவேண்டியிருப்பதால், தனக்கு வேறொரு தினத்தை வழங்குமாறு தனது சட்டத்தரணி ஊடாக, சம்பிக்க ரணவக்க கோரியிருந்தார். அதற்கமைய எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டார். 2016ம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 19, 2020 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க