மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 392 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது. ஹெரோயின், கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை ஆகியன அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டாகும். ஒரு கிலோ கிராமிற்கும் அதிகமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 392 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்