இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (18) காலை சுப முகூர்த்த வேளையில் விளையாட்டு அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். சகல மத வழிபாடுகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் 2020 பொதுத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 165,970 முன்னுரிமை வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது..