fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,895 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2020 18:16

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2895 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் ஓமானில் இருந்து வருகை தந்த இருவர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் மேலும் 10 பேர்குணமடைந்ததை தொடர்ந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2676ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 206 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். 65 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேநேரம் லங்காபுர சுகாதார மருத்துவ பிரிவில் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்ட 16 குடும்பங்களைச் சேர்ந்த 79 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்துள்ளனர். அவர்களுள் எவருக்கும் வைரஸ் தொற்றவில்லையென பி.சி.ஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளோரின் மருத்துவ அறிக்கைகள் கிடைக்கப்பெறவுள்ளதாக லங்காபுர சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து வருகை தந்து இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 120 பேர் இன்று மு.ப வீடு திரும்பியுள்ளனர். வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்த்pல் இருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2020 18:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க