fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சகல பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மீள திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2020 10:13

நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களும் இன்றைய தினம் திறக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 15 முதல் மருத்துவ பீடங்களின் 3ம் ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் நடத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இணையத்தளத்தினூடாக முன்னெடுக்கப்பட்ட கற்றல் செயற்பாடுகள் வெற்றியளித்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டாலும், சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 17, 2020 10:13

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க