உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அதிகாரிகள் கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு விஜயம்…
Related Articles
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு விஜயம் செய்துள்ளனர். ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றைய தினம் ஆலயத்திற்கு விஜயம் செய்ததாக ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது சுமார் ஒரு மணித்தியாலம் வரை ஆலயத்தின் கண்காணிப்பு பணியில் அவர்கள் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நீர்க்கொழும்பு புனித செபஸ்டியன் தேவாலயத்தின் அருட்தந்தை வணக்கத்துக்குரிய மஞ்சுல நிரோஷனையும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.