fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கையிலும் அனுஸ்டிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2020 18:40

கண்டியில் உள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உதவி உயர்ஸ்தானிகர் திரேந்திர சிங் தலைமையில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன. மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே, பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேநேரம் இந்தியாவின் 74வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் கொண்டாடப்பட்டது. மருதடியில் அமைந்துள்ள யாழ் இந்திய உதவி துணை தூதரகத்தில் உதவி துணை தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் இந்திய தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியையும் அவர் வாசித்தார். அத்துடன் இதனை முன்னிட்டு மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

இதேவேளை இராமகிருஸ்ன அடிகளாரின் அருங்காட்சியகத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இராமகிருஸ்ன மிஷன் சுவாமி ஸ்ரீமத் தக்ஷயானந்த ஜி மகாராஜ் மற்றும் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் ஆகியோர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு இராமகிருஸ்ன மிஷன் சுவாமிகளது சமாதி அமைந்துள்ள மணி மண்டப வளாகத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இங்கு சுவாமிகளது படைப்புக்களான நூல்கள் மற்றும் அவரோடு தொர்புடைய ஏனைய அம்சங்கள் அனைத்தும் பொதுமக்கள் அறிந்துக் கொள்வதற்காக இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்த்தானிகர் கோபால் பாக்ளே தலைமையில் இந்திய சுதந்திர தின நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்திய தூதரக அதிகாரிகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் குறித்த நிகழ்வில் பங்கேற்றனர். இலங்கை கடற்படையின் வாத்திய குழுவின் பங்கேற்புடன் மரியாதை அணிவகுப்பு இடம்பெற்றது. கொழும்பு கலாசார மத்திய நிலையத்தின் நடனக் கலைஞர்களின் பங்கேற்புடன் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 15, 2020 18:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க