fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு மற்றும் அதனை அண்டிய ஒரு சில பகுதிகளில் போதை பொருள் சுற்றிவளைப்புக்கள்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2020 13:06

கொழும்பு மற்றும் அதனை அண்டிய ஒரு சில பகுதிகளில் போதை பொருள் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

பொரளை, இங்கிரிய, வத்தளை, மீரிஹான ஆகிய பகுதிகளிலேயே இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. பொரளை சின்னத்தீவில் நேற்று கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் இன்று மாளிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இப்பெண் சந்தேக நபர் ஒரு கிராமும் 800 மில்லி கிராம் போதை பொருளுடனும் ஒருஇலட்சத்து 15 ஆயிரம் ரூபா பணத்துடனும் கைது செய்யப்பட்டார்.

வத்தளை எலகந்த பஸ்தரப்பு நிலையத்தில் ஹெரொயின் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரும் பெண் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மட்டக்குழி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்கள். இவர்களும் இன்று வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நுகோகொட தெல்கந்த சந்தியிலும் ஹெரோயின் சுற்றி வளைப்புக்கள் இடம்பெற்றன. மீரிஹான பொலிசாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமையவே இச்சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 2 கிராமும் 60 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்இன்று கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2020 13:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க