fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்றைய தினத்துக்குள் வழங்கப்பட வேண்டும்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2020 08:45

தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் இன்றைய தினத்துக்குள் வழங்கப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ஐக்கிய தேசிய கட்சி தமக்கான ஒரு தேசிய பட்டியல் உறுப்பினரது பெயரை கூட இதுவரை வழங்கவில்லை. கட்சி தலைமைத்துவம் தொடர்பாக எழுந்துள்ள நெருக்கடிக்கு மத்தியில் இது தாமதமடைந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் அபே ஜனபல கட்சியின் செயலாளர் பதவி தொடர்பாக தொடர்ந்தும் நெருக்கடி நிலை நீடிக்கின்றது. அதன் செயலாளராக முன்நின்றுள்ள இருவர் கட்சிக்குரிய தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி தமக்கே வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் பதில் செயலாளர் சங்கைக்குரிய வேதெனியே விமலதிஸ்ஸ தேரர் மற்றும் சமன் பெரேரா ஆகியோர் இவ்வாறு தேசிய பட்டியல் உறுப்புரிமையை கோரியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 14, 2020 08:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க