fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இறந்த பிரதீப் சிங் அங்கொட லொக்காவா ? இந்திய பொலிஸாரின் நெருக்கடியை போக்க விரல் அடையாளம்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2020 20:42

அங்கொட லொக்கா உண்;மையாகவே இந்தியாவில் உயிரிழந்தாரா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரது விரல் அடையாளம் மற்றும் பெற்றோரின் இரத்த மாதிரிகள் இந்திய பாதுகாப்பு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள்தாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டு அவர் கைது செய்யப்படும் போது பெற்று கொள்ளப்பட்ட விரல் அடையாளர்கள் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மத்துமகே சந்தன லசந்த பெரேரா அல்லது அங்கொட லொக்கா இலங்கையின் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை புரிந்துவந்த கும்பலின் தலைவர் ஆவார். அவர் இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் உடலில் விஷம் செலுத்தப்பட்டு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் இதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அவ்வாறு உயிரிழந்தவர் அங்கொட லொக்கா தான் என்பதை சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை.

( இந்த மரணத்தை சட்டரீதியாக உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வெளியுறவு அமைச்சு ஊடாக இலங்கையினால் வழங்கப்பட கூடிய அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை உத்தியோகபூர்வமாக இது உறுதிப்படுத்தப்படவில்லை. )

அங்கொட லொக்காவின் விரல் அடையாளங்கள் அவரினது பெற்றோரின் இரத்த மாதிரிகள் டி.என்.ஏ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் அவர் உறுதியாக உயிரிழந்ததாரா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியும். அங்கொட லொக்காவின் படுகொலை தொடர்பாக இந்திய பொலிசாரினால் கைது செய்யப்பட்ட அவரது காதலி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவரது காதலி என கூறப்படும் அமானி தஞ்ஜி மதுரையை சேர்ந்த சிவகாமி சுந்தரி மற்றும் அவரது உதவியாளர் தியானேஸ்வரன் ஆகிய சந்தேகநபர்கள் மீண்டும் நாளை மறுநாள் இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விஷம் உடலில் ஏற்றப்பட்டமைக்கு மேலதிகமாக அங்கொட லொக்கா தனது பெயரை மாற்றி இந்தியாவில் போலியான பெயரில் நடமாடுவதற்கு போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்;டப்பட்;டுள்ளது. பிரதீப் சிங் என அவர் இந்தியாவில் நடமாடியுள்ளதாகவும் அந்த பெயரிலேயே அவரது சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவுக்கு தப்பிச்சென்ற அங்கொட லொக்கா முதலில் சென்னையில் வசித்துள்ளார். அவர் சென்னையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் தலைவர் சங்கர் இந்;திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

அங்கொட லொக்கா என்பவருக்கு இந்திய மத்திய உளவு பிரிவினரால் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இந்திய மத்திய உளவு பிரிவு ஏழு விசேட பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி இவரது மரணம் தொடர்பாக கண்டறிந்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 13, 2020 20:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க