fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 12, 2020 14:10

நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கோடை காலத்தில் சுhதார வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் போட்டிகளை ஆரம்பிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, 4 அணிகள் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, பங்களதேஷ் ஆகிய அணிகள் நியூசிலாந்துடனான சர்வதேச தொடர்களில் பங்கேற்கவுள்ளன. குறித்த 4 அணிகளும் நியூசிலாந்திற்கு வருகைதர இணக்கம் தெரிவித்துள்ளதாக நியூசிலாந்து கிரிக்கட் சபையின் தலைவர் டெவிட் வைட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் டெஸ்ட் மற்றும் ருவண்டி 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. நியூவிலாந்து அணி அவுஸ்ரேலியாவுடனான தொடர் ஒன்றில் பங்கேற்கவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 12, 2020 14:10

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க