முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு பத்தரமுல்லை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் இன்றைய தினம் கடுவல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். தலங்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.