fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தோனியின் தலைமைத்துவம் சிறப்பானதென முரளிதரன் புகழாரம்..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2020 12:36

இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் சிறப்பானதென இலங்கை அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு உலக ருவண்டி 20 கிண்ண போட்டியில் இந்திய அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி செயற்பட்டு கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார். சக வீரர்களுடன் நட்புறவுடன் செயற்படும் அவரது திறமை பாராட்டுக்குரியதெனவும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். சக வீரர்களின் தவறை அனைவரின் முன்னும் சுட்டிக்காட்டாமல் தனியாக அழைத்து தெரிவிப்பார். குறித்த விடயமும் அவரது, வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கு காரணமாகும். அமைதியாக சிந்திக்கும் திறன் கொண்ட மகேந்திர சிங்தோனி சக வீரர்களின் கருத்துக்களை கேட்டு ஆலோசித்து முடிவுகளை எடுப்பார். அணியை வெற்றிகரமாக நடத்தி செல்ல தேவையான வீரர்கள் தொடர்பில் கவனமாக இருப்பார் என முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 11, 2020 12:36

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க