லெபனான் தலைநகர் பெரூட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை அடுத்து அந்நாட்டு அரசாங்கம் பதவி விலகுவதாக பிரதமர் ஹசன் டயப் தெரிவித்துள்ளார். சம்பவத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள நிலையில், அதன் பிரதிபலிப்பாக அரசாங்கம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது. லெபனான் தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றிய போது பிரதமர் ஹசன் டயப் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பெரூட் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. 6 ஆயிரத்திற்கம் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது வீடுகளில் இருந்து வெளியியேறியுள்ளனர். பலர் காணாமல்போயுள்ள நிலையில, உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென பெரூட் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
லெபனான் வெடிப்பு சம்பவம் இடம்பெறுவதற்கு அந்நாட்டு நீதிமன்ற கட்டமைப்பும் காரணமென குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு நீதியமைச்சர் மேரிட் கிளாட் பதவியை இராஜினமா செய்துள்ளார். இதேவேளை, 9 பாராளுமன்ற உறுப்பினர்களும், 2 அமைச்சர்களும் இதுவரை பதவியில் இருந்து விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.