fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் வெற்றியையடுத்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 13:08

பொது தேர்தலில் பெற்றுக் கொண்ட வரலாற்று ரீதியிலான வெற்றியையடுத்து பொது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு பொறுப்புடன் செயல்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

(பொது தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வழங்கியுள்ளீர்கள். 3 இல் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்கள் தொடர்பான நம்பிக்கையும், பிரதமர் தொடர்பிலான நம்பிக்கையுமே இவ்வெற்றி;க்கு காரணம். தேர்தல் வரலாற்றில் பாரிய வெற்றிஏற்பட்ட சந்தர்ப்பம்இதுவாகும். தற்போது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னேற்றபாதையில் செல்ல வேண்டும்.)

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக சிறந்த நாட்டை கட்டியெழுப்புவது தொடர்பிலும் அவர் கருத்து தெரிவித்தார்.

(எதிர்கால சந்ததியினருக்கான சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் செயல்படுகின்றனர். இந்நாட்டில் காணப்படும் போதை பொருளையும் பாதாள உலக செயல்பாடுகளையும் இல்லாமல் ஒழிப்பதற்கும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.எதிர்காலத்தில் நாங்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் அல்லது வடக்கு, கிழக்கு தெற்கென வேறுபடுத்தி கொள்ளாமல் இலங்கையர்கள் என்ற ரீதியில் இந்நாட்டிற்கு சேவையாற்ற தயாராகவுள்ளோம்.)

 

 

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 13:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க