உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியை எட்டியுள்ளது. 2 கோடியே 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 இலட்சத்து 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணித்துள்ளனர். ஒரு கோடியே 29 இலட்சத்துகும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் 51 இலட்சத்து 99 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒரு இலட்சத்து 65 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் அமெரிக்காவில் 47 ஆயிரத்து 849 பேர் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளதோடு 534 மரணங்கள் சம்பவித்துள்ளன.