வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 176 இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைதந்துள்ளனர். 2 விமானங்கள் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். டோஹாவில் இருந்து வருகைதந்த கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் ஊடாக 28 பேர் தாயகம் திரும்பினர். இன்று அதிகாலை 1.45 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதேவேளை, ஜப்பானின் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 148 பேர் நரிட்டா விமானநிலையத்தில் இருந்து இன்று அதிகாலை நாட்டிற்கு வருகைதந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததோடு, அவர்களை தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் 176 இலங்கையர்கள் நாட்டிற்கு..
படிக்க 0 நிமிடங்கள்