fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று ..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 11:40

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்படுமென அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஏனைய அரசியல் கட்சி தலைவர்களுக்கிடையில் இன்று முற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வாக்குறுதிகள் வழங்கிய வகையில், தமது கட்சிகளுக்கு தேசிய பட்டியலுக்கான உறுப்பினர் பதவி வழங்கப்படாவிட்டால், 15 உறுப்பினர்களுடன் தாம் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக மனோகணேஷன் தெரித்துள்ளார். ரவூப் ஹகிம் மற்றும் ரிஷாட் பதூர்தீன் ஆகியோரது கட்சிகளில் உறுப்பினர்களும் இதில் உள்ளடங்குவதாக மனோகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 11:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க