fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மஸ்கெலிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 11:38

நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 7 குடும்பங்களை சேர்ந்த 32 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலையகத்தின் பல பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையினை அடுத்து, மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் லயன் குடியிருப்பு தொகுதியொன்றில் மண்மேடு சரிந்து வீழுந்துள்ளது. இதனால், குறித்த வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கிராம சேவை அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான நிவாரண உதவிகள் நுவரேலிய மாவட்ட செயலகம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்படுகின்றன. மலையகத்தில் தொடர்ச்சியாக சீரற்ற வானிலை நிலவி வருகின்றமையினால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைப்பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த வீதியில் மண்மேடு சரிந்து வீழுந்துள்ளதோடு மரங்களும் முறிந்து வீழுந்துள்ளமையே இதற்கு காரணமாகும்.

இதேவேளை, நுவரேலிய மாவட்டத்தின் கொத்மலை பிரதேச பிரிவிற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிவரை அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிருவகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 11:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க