fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்கொரியாவில் அனர்தங்களில் சிக்குண்டு 30 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 11:37

தென்கொரியாவில் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்துள்ளனர். சியோல், ஹெடோன் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்துவரும் பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 667 மண்சரிவு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. வெள்ளம் காரணமாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனர்த்தங்களில் சிக்குண்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 10, 2020 11:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க