fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பூரண குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,576 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2020 18:10

பூரண குணமடைந்த குணமடைந்த தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,576 ஆக அதிகரித்துள்ளது.

பொதுத் தேர்தல் நடவடிக்கைகளின் பின்னர் தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்பட்ட சகல இடங்களும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள், முப்படையினர் இணைந்து அது தொடர்பான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2839 ஆகும். தற்போது 252 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 51 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் வரை கந்தகாடு மற்றும் சேனபுர போதைத்தடுப்பு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொற்றாளர்களாக 604 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 483 பேர் புனர்வாழ்வு பெறும் கைதிகளாவர். 67 பேர் மத்திய நிலையத்தின் ஊழிய படையணியைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்த உலகின் முதல் நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டதென சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப்பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 8, 2020 18:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க