ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் வெற்றியானது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் வேலைத்திட்டங்கள் குறித்த மக்களின் நம்பிக்கையின் ஊடாக கிடைக்கப்பெற்ற வெற்றியென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அக்கட்சியின் தலைமையகதத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கடந்த 7 மாதங்களில் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுத்த விடயங்களின் முடிவுகளின் ஊடாக மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டமைதான் இந்த பாரிய வெற்றியாகும். இந்த முடிவுகளில் முழுமையாக திருப்தியடைவதோடு இதனை ஒரு சவாலாக பார்க்கின்றோம். மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக முழுமையான அதிகாரத்தை எங்களது கட்சிக்கும் எங்களது அரசாங்கத்திற்கும் மக்கள் வழங்கியுள்ளார்கள். எதிர்வரும் 20 ம் திகதி பாராளுமன்றம் கூடும் போது எமது கட்சிக்கு 3 யில் 2 பெரும்பான்மை கிடைத்துள்ளது. தேவை ஏற்பட்டால் அரசியலமைப்பை சீர்திருத்தம் செய்யக்கூடிய அதிகாரமோ எமது அரசாங்கத்திற்கு காணப்படுகிறது.”
இதேவேளை பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லாமை குறித்து வருத்தமடைவதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதன்போது சுட்டிக்காட்டினார்.
“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக அரசாங்கமொன்றை ஸ்த்தாபிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் இன்று அரசாங்கமல்ல பலமான எதிர்கட்சியொன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலை அந்த அணியினருக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தென் மாகாணத்தைப் போன்று வடமாகாணத்திலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 16 ஆசனங்கள் காணப்பட்டது. அது தற்போது 10 ஆக குறைவடைந்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை வெளியிடக்கூடிய ஏகோபித்த தமிழ் பிரதிநிதிகள் தாம் தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு புதிய பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப முடியாது.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/HeB1f5HkzGM”]