fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2020 15:00

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் மழையுடன் கூடிய வானிலை நீடிக்குமென வளிமண்டலவிய திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சப்ரகமுவ, மேல், மத்திய மற்றுமு; வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். ஒருசில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகும்.

இதேவேளை வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும். பேருவளையிலிருந்து, காலி ஊடாக, ஹம்பாந்தோட்டை வரை கரையோர பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பகுதிக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்றொழில் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 7, 2020 15:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க