fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் முதலாவது அணுகுண்டு தாக்குதல்…

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2020 10:34

உலகின் முதலாவது அணுகுண்டு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 75வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஜப்பானில் ஹிரோசிமா நகரில் 2ம் உலக மகா யுத்தத்தின் போது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் ஹிரோசிமா நகரில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. கொவிட் 19 தொற்று காரணமாக நிகழ்வுகளில் அதிகளவானோர் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி ஜப்பான் ஹிரோசிமா நகரின் மீது உலகின் முதலாவது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ‘சிறு பையன்’ என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டு வீச்சில் சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அணுகுண்டு தாக்குதல் இடம்பெற்ற நொடியிலேயே 70 ஆயிரம் பேர் மரணித்தமை குறிப்பிடதக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 6, 2020 10:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க