இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மென்ஷெஸ்டரில் மோதுகின்றன. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவின் போது தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி இரண்டு விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. ஷான் மசூட் 46 ஓட்டங்களுடனும் பாபர் ஹஷாம் 69 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதேவேளை இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறுகிறது. இங்கிலாந்து அணி ஜோ ரூட் தலைமையிலும், பாகிஸ்தான் அணி அஷார் அலி தலைமையிலும் விளையாடுகின்றன.