fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக உயர்வு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2020 13:24

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 8 பேர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஐக்கிய அரபு எமீரகத்தில் இருந்து வருகைதந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதியொருவரோடு நெருங்கி பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வந்த 75 பேர் நேற்றைய தினம் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய, தற்போது வரை 2 ஆயிரத்து 514 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். 297 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 45 பேர் தொற்று சந்தேகத்தின் அடிப்படையில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். நாட்டில் இதுவரை ஒரு இலட்சத்து 62 ஆயிரத்திற்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2020 13:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க