fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 4 ஆயிரத்தை கடந்துள்ளது..

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2020 13:14

இந்தியாவில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 4 ஆயிரத்தை கடந்துள்ளது..

இந்தியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 4 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 52 ஆயிரத்து 783 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு 758 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய, வைரஸ் தொற்றினால் இதுவரை 38 ஆயிரத்து 161 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கர்நாடக மாநிலத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 5 ஆயிரத்து 532 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 819ஆக அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 2 ஆயிரத்து 496 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக முதலமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான பிஎஸ் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில்; தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 3, 2020 13:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க