அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்
Related Articles
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். பொலிவூட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்.