பொதுத்தேர்தலுக்கான அமைதிக்காலம் இன்று முதல்..
Related Articles
பொதுத்தேர்தலுக்கான அமைதிக்காலம் இன்று முதல் ஆரம்பமாகின்றது. அதற்கமைய, தேர்தல் இடம்பெறும் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.கூட்டங்களை நடாத்துதல், கையேடுகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொது தேர்தலுக்கென நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 894 மத்திய நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.