fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2020 19:54

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய தினம் இருவர் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். ஐக்கிய அரபு எமீரகத்தில் இருந்து வருகைதந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கைதியொருவரோடு நெருங்கி பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை 2 ஆயிரத்து 514 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். இன்னும் 292 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2020 19:54

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க