fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேர்தல் அமைதிக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலில்..!

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2020 19:18

பொதுத்தேர்தலுக்கான அமைதிக்காலம் இன்று நள்ளிரவுடன் ஆரம்பமாகின்றது. அதற்கமைய, கூட்டங்களை நடாத்துதல், கையேடுகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொது தேர்தலுக்கென நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 894 மத்திய நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை, தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான சகல தயார்படுத்தல்களும் தற்போது நிறைவடைந்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியன்த வீரசூரிய தெரிவித்துள்ளார். நாளைய தினம் அதிகாரிகள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் 3 ஆயிரத்து 69 நடமாடும் கவலரண்கள் இயங்குமென அவர் குறிப்பிட்டார். சட்டமீறல்கள் தொடர்பில் அவதானிப்பதற்கு ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் உளவு துறை அதிகாரியொருவர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருப்பார் என பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியன்த வீரசூரிய தெரிவித்தார்.

 

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 2, 2020 19:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க