fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புண்ணிய தளங்களின் வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளுக்கு முக்கியத்துவம்

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2020 13:09

புண்ணிய தளங்களின் வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளுக்கு முக்கியத்துவம்

புண்ணிய தளங்களின் வரலாற்று சிறப்புமிக்க உரிமைகளுக்கு அல்லது தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழிவை ஏற்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைத்து வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் பாதுகாப்பதுடன், வெல்லஸ்ஸ உரிமையை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பொதுஜன பெரமுன சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் மொனராகலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பெறுமதிகொண்ட விகாரைகளை, புதையல் திருடர்களிடம் இருந்து பாதுகாத்து தருமாறு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம்; கேட்டுக்கொண்டனர். வெல்லஸ்ஸவின் புராதன பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியம் தொடர்பிலும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. குளங்களை புனர்நிர்மாணம் செய்வதன் மூலம் விவசாயத்துறையை மேம்படுத்த முடியுமென மக்கள் இதன்போது தெரிவித்தனர். மொனராகலைக்கு முதலீட்டு வலயமொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை மக்கள் பாராட்டினர்.

வட்டக்காய் மற்றும் தர்பூசனி உள்ளிட்ட உப பயிர்ச் செய்கை உற்பத்தியை ஆரம்பிப்பதற்கும் மிளகு, தோடம்பழம் பயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். வெல்லஸ்ஸவுக்கு உரிய 36 விதை வகைகள் ஜனாதிபதி; கையளிக்கப்பட்டன. இதேவேளை, மொனராகலை சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொண்டு மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 1, 2020 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க