வெளிநாடுகளில் இருந்த இலங்கையர்கள் 349 பேரை ஏற்றிய இரு விமானங்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமாநிலையத்தை வந்தடைந்து. ஐக்கிய அரபு எமீர் ராஜ்ஜியத்திற்கு தொழிலுக்காக சென்ற 335 பேரை ஏற்றிய விமானம் நள்ளிரவு 12 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.
கட்டார் இராஜ்ஜியத்தில் இருந்து மேலும் 14 பேரை ஏற்றிய விமானம் அதிகாலை 1.30 மணிக்கு விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.