ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் தங்காலை நகரில் நாளையதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இடம்பெறும் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்துக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தங்காலை நகரில் இடம்பெறும் இறுதி கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.