தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று (01) காலை பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது.உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.
இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.