உலகின் வயது முதிர்ந்த திருமண ஜோடி 0
ஈக்வடோரை சேர்ந்த திருமண ஜோடியொன்று உலகின் வயது முதிர்ந்த திருமண ஜோடியாக கிண்ணஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவாகியுள்ளனர். ஜூலியோ சீசர் மோரா மற்றும் வொல்டுமீனா மெக்லோவியா ஆகியோர் திருமண பந்தத்தில் இணைந்து 79 வருடங்கள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடுகின்றனர். ஜூலியோ சீசமோரா 110 வயதை கடந்துள்ள நிலையில் வொல்டுமீனாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 105 வயதாகவுள்ளது.