fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ராஜாங்கனை பகுதி முற்றாக திறப்பு…. லங்காபுர பகுதியில் தொடர்ந்தும் பிசிஆர் பரிசோதனை…..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 19:40

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதன் பின்னர், ராஜங்கனை பகுதியில் விதிக்கப்பட்டிருந்த நடமாடுவதற்கான தடை இன்று முற்றாக நீக்கப்பட்டது. இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் 58 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதற்கமைய, இலங்கiயில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 814 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்னும் 412 பேர் தொடர்ச்சியாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் இதுவரை ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 943 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது. நேற்றைய தினம் ஆயிரத்து 170 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, லங்காபுர பிரதேச செயலக காரியாலயத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அந்த காரியாலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள 200 பேருக்கு நேற்றிரவு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகத்திற்கிடமான சகலருக்கும் பிசிஆர் பரிசோதகைள் மேற்கொள்ளப்படுமென சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது. லங்காபுர பிரதேச செயலக காரியாலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதியை சேர்ந்த மக்கள் வெளியில் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் சென்ற இடங்களை அடையாளம் கண்டு, இன்றைய தினம் ஆயிரம் பேருக்கு பிசிஆர் பரிசோதகைள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 19:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க