fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அதிகாரத்துக்கு வந்து 24 மணித்தியாலயத்துக்கு முன்னர் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 13:16

அதிகாரத்துக்கு வந்து 24 மணித்தியாலயத்துக்கு முன்னர் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்

தமது கட்சி அதிகாரத்துக்கு வந்து 24 மணித்தியாலயத்துக்கு முன்னர் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்க போவதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாதுக்கையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் மக்கள் சந்திப்பொன்று பாதுகாக்க சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தை வேட்பாளர் லேனார்ட் கருணாடரட்ன ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது சஜித் பிரேமதாச கிட்;டார் வாசித்து வருகை தந்தவர்களை மகிழ்வித்தார்.

( இம்முறை தேர்தலில் முழு நாட்டிலும் அதிகூடிய உறுப்பினர்களை பெற்று எமது கட்சி அரசாங்கத்தை அமைக்கும். தற்போதைய அரசாங்கத்துக்கு பொருளதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. ஆனால் எம்மிடம் தீர்வு உள்ளது. எமது அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு 24 மணித்தியாலத்துக்குள் எரிபொருளின் விலையை குறைப்போம்.)

இதேநேரம் புலத்சிங்கள பொதுமக்கள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்திலும் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். புலத் சிங்கள தொகுதி அமைப்பாளர் ஜகத் விதான இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் இணைந்திருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 13:16

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க