fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

PCR பரிசோதனைகள் மேலும் அதிகரிப்பு : கொரோனாவை ஒழிக்க தொடர்ந்தும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 13:05

PCR பரிசோதனைகள் மேலும் அதிகரிப்பு : கொரோனாவை ஒழிக்க தொடர்ந்தும் வேலைத்திட்டம்

தற்போது நாட்டுக்குள் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 940 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மேற்கொண்ட 1170 பி.சி.ஆர் பரிசோதனைகளும் இதில் உள்ளடங்கும்.

லங்காபுர பிரதேச செயலகத்தின் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து அந்த காரியாலய மற்றும் அப்பகுதியில் உள்ள 200 பேருக்கு நேற்றிரவு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகத்திற்கு இடமான அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக பொலன்னறுவை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் நிர்வாக அதிகாரி ஜயந்த சந்ரசிறி தெரிவித்தார். லங்காபுர பிரதேச செயலகம் மற்றும் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியில் நடமாடுவதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பயணித்த இடங்களையும் கண்டறிந்து இன்றைய தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நேற்று அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களுடன் இந்நாட்டில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2814ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 16 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். குணமடைந்தோரின் எண்ணிக்கை 2333ஆக உயர்வடைந்துள்ளது. அதன் அடிப்படையில் தற்பொழுது 472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 86 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 31, 2020 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க