கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அடுத்த மாதம் 31ம் திகதி வரை ஒன்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்கள் அதிபர் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தின் ஊடாக விண்ணப்பிப்பது அவசியம். றறற.னழநநெவள.டம எனும் முகவரியில் பிரவேசித்து, சரியான முறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இதேவேளை அரச நிறுவனங்கள் உட்பட ஏனைய துறைகளில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய முறை தொடர்பிலும் பரீட்சைகள் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டாம் மொழியான தமிழ் மற்றும் சிங்கள பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் நிறுவன பிரதானியூடாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும். எவ்வாறெனினும் அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தளததினூடாக முதலில் அனுப்பிவைக்கப்பட வேண்டும். பின்னர் பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.