உத்தரவாத விலையை விட கூடுதல் விலைக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை முற்றுகையிட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தீர்மானித்துள்ளது. இன்றுமுதல் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுமென அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
டெங்கு பரிசோதனைக்காக உயர்ந்த பட்ச கட்டணம் ஆயிரத்து 200 ரூயஅp;பாவாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழுயான இரத்த பரிசோதனைக்கான கட்டணம் 400 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்துவது கட்டாயமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல்சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.