கொரோனா வைரஸ் தொற்றைய விரைவில் கண்டறியும் நோக்கில் இஸ்ரேலுடன் இணைந்து புதிய கருவியை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா ஈடுப்பட்டுள்ளது. குறித்த கருவியின் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் 30 விநாடிகளில் கண்டறிய முடியுமென தெரியவந்துள்ளது.
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலமே சமூகத்தில் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். இந்நிலையில் துரித கதியில் வைரஸை கண்டறியும் கருவியை உருவாக்கும் செயற்திட்டத்தை இந்திய மத்திய இராணுவம் மற்றும் இஸ்ரேலின் நிபுணர் குழு இணைந்து முன்னெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.