வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகளுக்கு சட்டவிரோத பொருட்கள் மற்றும் பொதிகளை வழங்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொரல்ள பொலிஸார் சிறைச்சாலை வளாகத்தில் இது தொடர்பான சோதனையை முன்னெடுத்தனர். சந்தேக நபரிடம் இருந்து பொதி ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறைச்சாலை மதிலின் ஊடாக கைதிகளுக்கு பொதிகளை வீசிய சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைக்கப்பெற்றன.
இதேவேளை பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கெசேல்வத்த தினுக்க மற்றும் மாகந்துரே மதுசின் உதவியார்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.