fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுத்த வருடம் ஜூலை மாதம் வரை வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 12:15

அடுத்த வருடம் ஜூலை மாதம் வரை தமது ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிவதற்கு கூகுல் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. கூகுல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் உயர் மட்ட நிர்வாகிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது.

கூகுல்நிறுவனம் இவ்வருடம் பல பகுதிகளில் தமது அலுவலகங்களை திறக்க தீர்மானித்திருந்த நிலையிலேயே வைரஸ் தொற்று ஏற்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கமானது அடுத்த வருட ஆரம்ப வரை நீடிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே 2021ம் ஆண்டு வரை தமது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான அனுமதி கூகுல் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 12:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க