ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்
Related Articles
ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் 28ம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டிகளை இலங்கை கிரிக்கட் சபை ஏற்பாடு செய்துள்ளது. யாழ்பாணம், கொழும்பு, தம்புல்லை, கண்டி மற்றும் காலி ஆகிய ஐந்து அணிகள் தொடரில் பங்கேற்கவுள்ளன. தொடரில் 23 போட்டிகள் இடம்பெறவுள்ளன. பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானம், ரன்கிரி தம்புல்லை சர்வதேச கிரிக்கட் மைதானம், பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானம், சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ சரிவதேச கிரிக்கட் மைதானம் என்பவற்றில் போட்டிகள் இடம்பெறவுள்ளது. போட்டிக்கான அட்டவனை விரைவில் வெளியிடப்படுமென இலங்கை கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.