fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்சீன கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியில்..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 12:10

தென்சீன கடற்பகுதியில் சீனா போர் பயிற்சியில் ஈடுப்படவுள்ளது. இதில் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் மற்றும் ரொக்கட்டுகள் பரிசீலிக்கப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தென்சீன கடற்பகுதியின் நுழைவாயிலாக கருதப்படும் குவான்டான் மாகாணத்தில் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. சீன கடற்படையினரும் பயிற்சிகளில் பங்கேற்கவுள்ளனர். ஒரு வார காலத்திற்கு இடம்பெறவுள்ள குறித்த பயிற்சிகளில் எதிரி நாடுகளின் கப்பல்கள் மற்றும் விமானங்களை குறிவைத்து தகர்க்கும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

சக்தி வாய்ந்த வெடிப்பொருட்கள் மற்றும் ரொக்கட்டுகள் பரிசீலிக்கப்படவுள்ளமையால் குறித்த பகுதிக்குள் உள்நுழைவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சீன இராணும் உத்தரவிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 28, 2020 12:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க